சித்திரவதைக்கு உள்ளான 8 வயது பிக்கு

புஸ்சல்லாவ இரட்டை பாதை பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர், மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியமையால் சக மூன்று பிக்குகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துறவரம் பூண்டு 45 நாட்களேயான எட்டு வயது பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு துன்புருத்தப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்