சித்தார்த்தின் 3 BHK எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும்

ஜூலை 04 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ 3 BHK ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ இடி மழை’ எனும் பாடல் வெளியாகி , குறுகிய நேரத்திலேயே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதன் காரணமாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ 3 BHK ‘ திரைப்படத்தில் சித்தார்த் , சரத்குமார், தேவயானி, யோகி பாபு ,மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தினேஷ் கிருஷ்ணன் & ஜித்தின் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார், தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரித்திருக்கிறார்.