
சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சடலம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

