சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொது மக்கள் மீது 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது .
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் குண்டுக்காயத்துடன் கடுமையான நிலையில் உள்ளார், ஏனையவர்கள் கண்ணாடிச் சில்லுகள் மற்றும் உடைந்து சிதறிய பொருள்களால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் .
சம்பவம் தொடர்பில் சிட்னி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
