
சிசிடிவியால் சிக்கிய 610 சாரதிகள்
பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 610 சாரதிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வீதி விதிகளை மீறும் வாகன சாரதிகளைக் கண்டறியும் சிசிடிவி வேலைத்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு முடிவடைந்த ஒரு வாரத்துக்குள், வீதி விதிகளை மீறிய 610 வாகன சராதிகளை பொலிஸார் அறிவுரை கூறி விடுவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் போக்குவரத்து குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
