சிங்கங்கள் ஏற்றுமதியா?

100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்திய விவசாய அமைச்சகம் இப்போது குரங்குகளையும் சிங்கங்களையும் கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் டோக் மக்காக் குரங்குகளை அகற்றும் திட்டத்தை விவசாய சங்கங்கள் ஆதரிக்கின்றன என்று அமைச்சு ஏப்ரல் 16 அன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது.

எவ்வாறாயினும், குறித்த ஊடக அறிக்கையின் இரண்டாவது பந்தியில், டோக் மக்காக்கள் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, 100,000 ‘சிங்கங்களை’ ஏற்றுமதி செய்யும் திட்டம் இருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது பற்றிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த அமைச்சுஇ நாட்டின் காடுகளில் ஒரு சிங்கம் கூட இல்லைஇ அத்துடன் வரலாற்றுக்கு முந்திய சிங்கங்கள் வெகு காலத்திற்கு முன்பே அழிந்துவிட்டன என்பதை மறந்து விட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்