சிக்கன் ஈரல் நன்மைகள்

சிக்கன் ஈரல் நன்மைகள்

சிக்கன் ஈரல் நன்மைகள்

🔶உலகளவில் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு இறைச்சி என்றால் அது சிக்கன்/கோழி தான். ஏனெனில் சிக்கன் அனைத்து தரப்பினரும் வாங்கக்கூடிய வகையில் விலை குறைவில் கிடைக்கிறது. அதே சமயம் மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் சிக்கனில் கொலஸ்ட்ரால் சற்று குறைவு.

🔶ஆனால் சிக்கனை சமைக்கும் பலர் அதன் ஈரலை சாப்பிட மறுப்பார்கள். ஏனெனில் சிக்கன் ஈரல் ஆரோக்கியமானதல்ல என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. உண்மையில் மட்டன் ஈரலைப் போன்றே சிக்கன் ஈரலும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. சிக்கன் ஈரலை சாப்பிடும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்தவகையில் சிக்கன் ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

🎈சிக்கன் ஈரல் உடலின் ஆரோக்கியமான மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதில் ஹீம் இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் கலந்திருப்பதால், இரத்த சோகை அல்லது பிற இரத்த சிவப்பணு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுப் பொருள். சிக்கன் ஈரலை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் வேறு எவ்விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

🎈சிக்கன் ஈரலில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ஈரலை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக பெண்கள் சிக்கன் ஈரலை சாப்பிடுவது ரொம்பவும் நல்லது. சிக்கன் ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது.

🎈பி வைட்டமின்களானது உடல் செல்களின் முறையான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. இவை தான் உணவுகளை ஆற்றலாக மாற்ற உதவுகின்றன, புதிய இரத்த செல்களை உருவாக்கவும, சரும செல்கள், மூளை செல்கள் மற்றும் பிற உடல் திசுக்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவுகின்றன. இப்படிப்பட்ட பி வைட்டமின்கள் சிக்கன் ஈரலில் அதிகம் உள்ளன.

🎈வைட்டமின் ஏ பார்வைக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும், இனப்பெருக்க மண்டலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும். மேலும் வைட்டமின் ஏ இதயம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புக்கள் சரியாக செயல்பட உதவுகிறது. இப்படிப்பட்ட வைட்டமின் ஏ சிக்கன் ஈரலில் அதிகமான அளவில் நிறைந்துள்ளன. சிக்கனை ஈரலை வாரந்தோறும் உட்கொண்டு வந்தால் சருமம், நகம், தலைமுடி, கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

🎈தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளனர். இதனால் கொழுப்புஇ கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். சிக்கன் ஈரலில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிக்கன் ஈரல் மிகச்சிறந்த உணவு. இதை உட்கொள்வதன் மூலம், வயிறு சட்டென்று நிரம்புவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

சிக்கன் ஈரல் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்