சிகரெட்டுகளுடன் வெளிநட்டு பிரஜை கைது

நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் வெளிநட்டு பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 56 வயதுடைய இந்தியர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.