
சாவகச்சேரி நகரப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று 200 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் – சாவகச்சேரிக்கு குறித்த இளைஞர்கள் போதை மாதித்திரைகளை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த இருவரும் நின்றுகொண்டிருந்தபோது சாவகச்சேரி பொலிஸார் அவர்கள் இருவரையும் சோதனையிட்ட நிலையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
