
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் குருதிக்கொடை முகாம்
-யாழ் நிருபர்-
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இரத்ததானமுகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்