சாவகச்சேரியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
-யாழ் நிருபர்-
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட நகர் வட்டாரத்தில் டச் வீதி புளியடிச் சந்தியில் வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவுள்ள பகுதி நகரசபையினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
குறித்த வீதியின் புனரமைப்பு பணிகளை நகராட்சி மன்றின் உபதவிசாளர் ஞா.கிஷோர், உறுப்பினர் மு.கோகுல்றாஜ் உட்பட வீதியில் வசிப்பவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.
உபதவிசாளர் ஞா.கிஷோரின் முயற்சியின் பயனாக அனர்த்த புனரமைப்பு நிதியில் இருந்து உடனடியாக குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





