சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்விகற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கனடாவில் வசிக்கும் மனித நேய சமூக செயற்பாட்டாளரான காமலிற்றாவினால் வழங்கப்பட்ட நிதியில், 5வது ஆண்டில் காலடி வைக்கும் பிரீத்தி அறக்கட்டளையின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.