
சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி பகுதியில் இருந்து சாவகச்சேரிக்கு கஞ்சாவினை கொண்டு வந்த இருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்னர்.
இதன்போது கிட்டத்தட்ட ஏழு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மற்றும் கஞ்சாவினை எடுத்து வந்த வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
