சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

இந்தியாவில் சென்னை நந்தனம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

காரின் முன்பகுதியிலிருந்து கரும்புகை வெளியானதும் சாரதி உடனடியாக வெளியேறிய நிலையில், தீப்பற்றிய கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

மேலும் பரவிய தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தியபோதும், கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறிய பொலிஸார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்