சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாத ஒன்பது வெளிநாட்டினர் மீது சட்ட நடவடிக்கை!

செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒன்பது வெளிநாட்டினர் மீது, அஹங்கம பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்த குறித்த நபர்கள், நேற்று வியாழக்கிழமை, அஹங்கம பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சுற்றுலா பயணிகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.