
சாரதி அனுமதிப்பத்திரம் இனி சீராக கிடைக்கும்
கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் சுமார் 490,000 சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கிக் கிடந்ததால், அட்டைகளை அச்சிடுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வெளிநாடு செல்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அவசரமாக சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருநாள் சேவையின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டது.
தற்போது சுமார் 255,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிப்பதற்காக இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் இந்த நடைமுறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் இனி எவ்வித தாமதமுமின்றித் தமது அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
