
சாரதி அனுமதிப்பத்திரங்களில் “தவறுக்கான புள்ளிகளை” சேர்க்கும் முறைமை விரைவில் அமுல்படுத்தப்படும்!
சாரதி அனுமதிப்பத்திரங்களில், ‘தவறுக்கான புள்ளிகளை’ சேர்க்கும் முறைமை, அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் அமுல்படுத்தப்படும், என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான சாதனங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்து விட்டு தப்பி ஓட முயற்சித்து, பொலிஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஓட்டுநர்கள் மீது, கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி ஒழுங்குமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தவதற்கும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களைக் குறைப்பதற்கும் முன்னெடுக்கப்படும் பரந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் இடும் முறை, அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்பதை, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
