சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை வழமைக்கு திரும்பியது

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் Offline சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இன்று (03) முதல் வழமைபோல இடம்பெறும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.