சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் சோதனைக் குழாய்கள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

அவற்றுள் சுமார் 70 ஆயிரம் சோதனைக் குழாய்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக மற்றும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கான கண்காணிப்பு பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.