சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை ஒழுக்காற்று குழு தலைவர் எம்.எப்.எம். றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சதாக்கா புல்லட்டின்” (Sadaqah bulletin) மற்றும் “ஃபெமிலி ரிலீஃப்” (Family Relief) போன்ற நிறுவனங்களின் பிரதிநிதி பொறியியலாளர் எம்.சி.கமால் நிஷாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளரும், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளருமான யூ.எல். நூருல் ஹுதா அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர் எம்.எப்.ஆர்.எம். ஹாதிம், பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர் அவர்கள் மாணவர் தலைவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து வழிகாட்டி உரையாற்றினார்.
புதிய மாணவர் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டியபோது, அவர்கள் வித்தியாலய ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள், இவ்வாய்ப்பின் மூலம் தங்களின் தலைமைத் திறமைகளை வெளிப்படுத்தி, வித்தியாலயத்திற்கு சிறந்த சேவை செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.