
சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீன் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் போது உணவகங்கள், வெதுப்பகங்கள், மரக்கறி, மீன் விற்பனை நிலையங்கள், பலசரக்கு கடைகள், ஸ்வீட்ஸ் கடைகள் என்பன பரிசீலிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் காலங்களில் உணவு சுகாதாரம் மீதான கண்காணிப்பு தொடரும் என்பதுடன் இறுக்கமான சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்படு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
