சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு

சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்கள மாகாண பொறியியலாளர் ஆகியோர் சாய்ந்தமருதின் தற்போதைய கடலரிப்பு நிலைகளையும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்களையும் அமைச்சர் மற்றும் கூடியிருந்த சபைக்கு விளக்கினர்.

கடலரிப்பின் அகோரம் காரணமாக மீனவர் வாடிகள், பள்ளிவாசல், அரச கட்டிடங்கள், சிறுவர் பூங்காக்கள் பாதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் விளக்கி மீனவர்களின் மீன்பிடி முற்றாக கடலரிப்பால் பாதிக்கப்பட்ட விடயத்தை சபைக்கு முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ், கடலரிப்பை தடுப்பது தொடர்பில் உள்ள அவசர நிலையை அமைச்சருக்கு விளக்கியதுடன் நிந்தவூரில் முன்னெடுக்கப்பட்டது போன்று நிரந்தரமான தீர்வு வழங்கப்பட்டு மீனவர்களுக்கு அவர்களின் தொழிலை சிறப்பாக செய்ய வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் மூன்று தடுப்பு சுவர்களை முதலில் ஆரம்பித்து தொடர்ந்தும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டிய விடயத்தையும் வலியுறுத்தினார்.

இப்பணியை சாய்ந்தமருதில் முன்னெடுக்க 55 மில்லியன் அளவில் செலவாகும் என்ற விடயமும் இங்கு பேசப்பட்டது.

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு