சாய்ந்தமருது இளைஞர்களுடனான ஒன்றுகூடல்

-அம்பாறை நிருபர்-

முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இல்லத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதோடு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமானஎம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம் பிர்தௌஸ், கல்முனை மாநகர சபை வேட்பாளர் எம்.எம்.பாமி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினர் ஏ.சி சமால்டீன், சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்