சாய்ந்தமருது அல்-ஜலாலில் விசேட விழுமியக்கல்வி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைப்பு
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் டீ.கே.எம். சிராஜின் வழிகாட்டலில் மாணவர் மத்தியில் விழுமியக் கல்வியை வளர்க்கும் நோக்கில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை நேர விழுமியக் கல்வி நிகழ்ச்சித் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண் மாணவர்களுக்கு பாடசாலை பள்ளிவாசலிலும் பெண் மாணவிகளுக்கு ஆராதனை மண்டபத்திலும் தனித்தனியாக இச்செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆண் மாணவர்களுக்கான விழுமியக் கல்வி தொடர்பான விசேட சொற்பொழிவினை பாடசாலையின் ஆசிரியர் மௌலவி எம்.ஏ. அரூஸ் அவர்களும் பெண் மாணவிகளுக்கான விழுமியக் கல்வி விசேட சொற்பொழிவை இஸ்லாம் பாட ஆசிரியை திருமதி. எஸ். சல்பினா அவர்களும் மேற்கொண்டிருந்தனர்.
இதனூடாக மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் விழுமியக் கல்வியை நோக்காகக் கொண்டு இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-