சாய்ந்தமருதில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையின் கீழ் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவானது இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சி கடைகளை பரிசோதனை செய்தது.

இந்த பரிசோதனையின் மூலம் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் காலங்களில் சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.