சாய்ந்தமருதில் இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பிரிவு மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வு நேற்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரின் வழிகாட்டலில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கலந்து கொண்டார்.
இச்செயலமர்வு சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ரீ.சபீர் அஹமட் கலந்து கொண்டார். நிகழ்வில் வளவாளர்களாக சட்டத்தரணி அசாம்இ சட்டத்தரணி பாத்திமா சாமிலாஇ வைத்தியர் சறாப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், அடிப்படைச் சட்டம் மற்றும் போதைப் பொருள் பாவனை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம்.ஐ.சம்சுதீன், செயலாளர் முபிதா மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பானது சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கு தேவையான மற்றும் காலத்திற்கேற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்தி மாவட்டத்தில் சிறந்த அமைப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சட்ட ஆலோசனை பற்றிய செயலர்வானது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீனின் முயற்சினால் இடம் பெற்றமையையிட்டு அவருக்கு நிகழ்வில் விசேடமாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்