
சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் கட்டா மைசம்மா என்ற இந்து மத கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குள் நேற்று சனிக்கிழமை நுழைந்த இளைஞன் (வயது 26) கோவிலில் உள்ள சாமி சிலை முன் சிறுநீர் கழித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், இளைஞனை பிடித்து நையப்புடைந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குறித்த இனைஞன் கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
