சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தற்கொலை

 

வெல்லவாய பிரதேசத்தில்  வீடொன்றில் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

 

வீரசேகரகம பிரதேசத்தைச் சேர்ந் இந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவன் தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்