சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே – ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டி காட்டியுள்ளார்.