சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட கூட்டு திட்டம்
சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் திட்டத்தைப் பரீட்சைத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
