சாதனை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.

இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.

அத்துடன் ஜவகல் ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் ஆகியோர் முறையே 2,3 மற்றும் 4ஆம் இடங்களில் உள்ளனர்