சாதனை படைத்த இலங்கை சுங்கம்

இலங்கை சுங்கம் ஒரே நாளில் அதிகபட்ச வரி வருவாயை பதிவு செய்துள்ளதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 24ஆயிரம் மில்லியனை இலங்கை சுங்க வரி வருவாய் கடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் ரூ.1,867 டிரில்லியனாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் சுங்கத்தின் வருடாந்த இலக்கான ரூ. 2,115 டிரில்லியனை எட்டும் வகையில் முன்னேற்றப் பாதையில் செல்வதாக இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.