சாணக்கிய நீதியில் விளக்கப்பட்டுள்ள பணத்தின் இயல்பு

உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக சாணக்கிய நீதி விளங்குகின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ளது.

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மதிப்பு குறையவே இல்லை. சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏராளம் பேர் இருக்கின்றனர்.

இவரின் கொள்ளைகள் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பலனளிக்க கூடியதாகவும், வாழ்வில் ஒரு நபர் எல்லா பருவங்களிலும் கடந்துவரக்கூடிய பிரச்சினைகளுக்கு தெளிவாக தீர்வு கொடுப்பதாகவும் அமையும்.

அந்த வகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒருவர் வாழ்வில் கோடீஸ்வரராக வேண்டும் என்றால், பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் பணத்திற்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காதவர்களிடம் பணம் சேராது என்கின்றார். பணத்தின் கடவுளாக திகழும் லட்சுமி தேவி பணத்தின் மதிப்பை அறியாதவர்களுக்கு பணத்தை கொடுப்பது கிடையாது.

பணத்தை வீண் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்களால் வாழ்வில் ஒருபோதும் வறுமையின் பிடியில் இருந்து மீளவே முடியாது.

மாறாக பணத்தை மதித்து பக்குவமாக சிந்தித்து செலவு செய்யும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் அசுர வேகத்தில் கோடீஸ்வரராகிவிடுவார்கள்.

சாணக்கிய நீதியின் பிரகாரம் தவறான வழியில் பணம் சம்பாதிப்பது ஆரம்பத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கின்றதோ, அதைவிட பலமடங்கு அதிகமான துன்பத்தை கொடுத்துவிட்டு செல்லும் என எச்சரிக்கின்றார்.

பணத்தை நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள் வாழ்வில் அசைக்க முடியாத செல்வத்தை உருவாக்குகின்றார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை விரைவில் பணக்காரராக்கும்.

தவறான வழியில் வந்த பணத்தை யாராலும் பாதுகாக்கவும் முடியாது சுதந்திரமாக செலவு செய்யவும் முடியாது. அது எப்படி வருகின்றதோ, அதே வேகத்தில் அழிந்துவிடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.

சாணக்கியரின் கொள்கையின்படி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் இருக்கும் இடதை சரியாக தெரிவு செய்து வசிக்கும் குணம் இருந்தால், அவர்களால் வாழ்வில் விரைவில் முன்னேற்றம் அடைய முடியும். இந்த புத்திசாலித்தனம் அவர்களை கோடீஸ்வரராக மாற்றும்.

சாணக்கியரின் கருத்துப்படி வாழ்வில் இலக்கு இல்லாதவர்களால், ஒருபோதும் பணத்தை சம்பாதிக்கவே முடியாது. எதை நோக்கி பயணிக்கின்றோம் என்பதே தெரியாமல் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியாது.

நிறைவான செல்வத்தைப் பெற வேண்டும் என்றால், முதலில் இலட்சியத்தை நிர்வகிக்க வேண்டியது இன்றியமையாதது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.

சாணக்கிய நீதியின் பிரகாரம் சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்யும் அளவுக்கு ஒருவருக்கு திறமை இருந்தால், அவர் விரைவில் கோடீஸ்வரராகலாம். வாழ்க்கையில் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பது அவசியம் தான் ஆனால் அதனை ஒருபோதும் செலவழிக்காமலே சேமிப்பது முட்டாள்தனம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி, முடிந்தவரை சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்வது மட்டுமே என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இந்த பழக்கங்கள் இருந்தால் இவர்களிடம் பணம் குவியப்போவதை யாராலும் தடுக்கவே முடியாது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்