சவுதி எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சவுதி எண்ணெய் நிறுவனமான அரம்கோ கடந்த 2023 ஆம் ஆண்டு 121 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது.

எனினும்  இது கடந்த 2022 ஐ விடக் குறைவாகும். அத்துடன் உலகளாவிய எரிசக்தி விலைகளை அதிகரிக்க ஓபிஈசிபிலஸ் (OPEC+) கூட்டணியின் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் உற்பத்தியைக் குறைத்து வருவதால், மேற்படி வீழ்ச்சியை பெற முடிந்ததாக தெரிவித்துள்ளது.

இதேவேளை அராம்கோ (Aramco) 2022 இல் 161 பில்லியன் டொலர் இலாபத்தைப் பதிவு செய்துள்ளது, இது பொதுவில் வர்த்தகம் செய்யப்பட்ட நிறுவனத்தால் இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய இலாபம் என கூறப்பட்டுள்ளது.