சவுதி அரேபியா தனது நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் முதல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் தேசிய வாகன நிறுவனமான Ceer தயாரித்த EXOBOT மின்சார செடான் மற்றும் SUV ஆகிய இரண்டு வாகனங்கள் செப்டம்பர் 21 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.
சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் (PIF) மற்றும் தைவானின் Foxconn நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக 2022ஆம் ஆண்டு Ceer நிறுவப்பட்டது. புதிய EXOBOT வாகனங்கள் சவுதி அரேபியாவின் கிங் அப்துல்லா பொருளாதார நகரம்(King Abdullah Economic City)-யில் அமைக்கப்பட்டுள்ள Ceer உற்பத்தி வளாகத்தில் தயாரிக்கப்பட உள்ளன.
EXOBOT செடான் மற்றும் SUV ஆகியவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஏழு வாகனங்களின் ஆரம்ப மாதிரிகளாகும். சவுதி அரேபியா எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைப் பல்வகைப்படுத்தும் Vision 2030 திட்டத்தின் கீழ் உள்நாட்டு வாகன உற்பத்தித் துறையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
Ceer நிறுவனம் 2034ஆம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 30 பில்லியன் சவுதி ரியாலுக்கும் அதிகமான பங்களிப்பையும், வர்த்தக சமநிலையில் 80 பில்லியன் ரியாலுக்கும் அதிகமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.










