சலுகைகள் மீளப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை மீண்டும் பெற்றுக்கொண்டமைக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

அத்தகைய உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்ற முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நினைத்தால் அதற்கு தான் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.

ஆனால் திருமண நிகழ்ச்சியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், மற்றொரு ஒரு திருமணத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், இவ்விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.