சர்வதேச விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா மற்றும் கொழும்பு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவருதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது, விமான நிலையத்தில் விமானம் ஊடாக வருபவர்களை அழைத்து வர செல்பவர்கள் காத்திருப்பதற்கான இடம் மர நிழலேயாகும். மரங்களுக்கு கீழே கல்லாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தற்போது மழை பெய்தால் கல்லாசனங்களில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டியது  அவசியமாகும் என  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.