பூமிக்கு புறப்பட்ட விண்வெளி வீரர்கள்

நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

அவர்களின் 18 நாட்கள் ஆய்வு நிறைவடைந்த நிலையில், 4 பேரும் இன்று பூமிக்கு புறப்பட்டுள்ளனர்.

ஆக்சியம் 4 திட்டத்தில், ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷூ சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழு புறப்பட்டது.

டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் நாளை கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்படுகிறது.