சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு  நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அதிகாரிகள் குழுவினர்  அமெரிக்காவுக்கு சென்று  சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல்  இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளை நாட்டிற்கு வந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது