சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில்  மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை  நேற்று சனிக்கிழமை 101.2 டொலராக பதிவாகியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேற்கு டெக்ஸாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 97.59 டொலராக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில், கடந்த வாரம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை விடவும் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.