International Potato Day : மே 30 ஆம் தேதி சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த முயற்சியானது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுவதால், உலக அளவில் முதல் ஐந்து முக்கிய உணவுப் பயிர்களில் உருளைக்கிழங்கு இடம் பெற்றுள்ளது. சிறிய அளவிலான மற்றும் குடும்ப விவசாய முறைகள், குறிப்பாக கிராமப்புற மற்றும் பெண் விவசாயிகளால் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உருளைக்கிழங்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டு பின்பு அது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.
சுமார் 5000 வகைகளுடன், உருளைக்கிழங்கின் பன்முகத்தன்மை உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலகளவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக இது மூன்றாவது அதிகளவில் நுகரப்படும் உணவுப் பயிர் ஆகும்.
உலகில் மொத்தம் 159 நாடுகளில் மொத்தம் 17.8 மில்லியன் ஹெக்டேயரில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகின்றன.
உலகில் ஆண்டுதோறும் 374 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப் படுகிறது.
பொதுவாக உருளைக்கிழங்கு வாயு தொல்லைகளை உருவாக்கும் என்றும், உருளைக்கிழங்கில் சீனி சத்தின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கை சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், உருளைக்கிழங்கை அளவாக சாப்பிடாமல், அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே வாயு, உடல் எடை அதிகரிப்பு எல்லாம் ஏற்படும்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை அதிகரிக்கிறது என்பது உண்மை ஆனாலும், உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உருளைக்கிழங்கில் நிறைந்து காணப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய விட்டமின் C உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது.
அதுபோல, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உண்மையில் இதய நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் தேவையான சத்தாகும்.
அதேபோல் உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடாமல் வேகவைத்து சாப்பிட்டால் முழு நன்மையையும் பெற முடியும் என்று கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள், குடல், இரைப்பைக் கோளாறுகள் ஆகியவற்றுக்கு உருளைக்கிழங்கு வரப்பிரசாதமாகும்.
உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு கவனமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
அதே சமயத்தில் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமான மின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு இது சிறந்த உணவாய் விளங்குகிறது.
விட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.
மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.
வாய் புண் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும். மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்சிஜன் வரத்து, வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
உருளைக்கிழங்கு தயாரிக்கப்படும் விதம் அவற்றை ஆரோக்கிய மற்றதாக்கும். ஆழமாக வறுத்தல், அதிகப்படியான வெண்ணெய், கிரீம், உப்பு சேர்ப்பது அல்லது முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மசாலாவைப் பயன்படுத்துவது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து மதிப்பை மாற்றலாம். உருளைக்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, அவற்றை ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது முக்கியம்.
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். இது சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்து விடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்சி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
உருளைக் கிழங்கில் உள்ள மாச்சத்து அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
உருளைக்கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து, இரண்டு கண்களின் மேலும் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணாமல் போகும்.
வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களையும் உருளை போக்கக் கூடியது, மலச்சிக்கலை மறையச் செய்கிறது. உருளைக்கிழங்கின் தைலத்தை வெந்நீரில் கலந்து காயமுற்ற உறுப்புகளின் மேலாக ஒத்தடம் கொடுக்க குணம் உண்டாகும்.
இப்படி உருளைக்கிழங்கில் அதிகம் நன்மைகள் உள்ளது.