சர்வதேச அளவில் இலங்கை கராம்பிற்கான கேள்வி அதிகரிப்பு

சந்தையில் ஒரு கிலோ காய்ந்த கராம்பின் விலை 2500 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ பச்சை கராம்பின் விலை 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் கராம்பு பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வெளிநாட்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கராம்புக்கு நல்ல கேள்வி உள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.