
சர்வதேசப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
சர்வதேசப் பாடசாலைகளை மூடுவதற்கு அந்தப் பாடசாலைகளின் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
