சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் பிரதமருடன் சந்திப்பு

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, சர்வக்கட்சி அரசாங்கத்திற்குள் இணைவதா அல்லது எதிரணியில் இருந்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் எதிர்கட்சிகள் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ள சகல கட்சிகளுக்கும் இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.