சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்

கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனத்தை சுட்டிக்காட்டி விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள குறித்த கருத்து இனத்தை குறித்து அவமதிப்பதாக உள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அவர் வெளியிட்ட இந்த கருத்து சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.