
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை வெளியிட்டார் கம்மன்பில!
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை சுங்க திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
இந்நிலையில் அவர் குறித்த சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள பட்டியல்👇
https://www.flipbookpdf.net/web/site/d04988b20d5af7db9242d2054d8404f1146968a5202506.pdf.html