சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜோடியாக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விஜய்-த்ரிஷா

AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமண வரவேற்பு விழா சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஒரே காரில் வந்திறங்கிய இருவரும், ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடந்த வாரம் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், விஜய்யின் இந்த வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடனான தொடர்பே விவாகரத்துக் கோரக் காரணம் என சங்கீதா குறிப்பிட்டிருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரை த்ரிஷாவுடன் இணைத்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

எனினும், இந்த விவகாரம் குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், இருவரும் பொது நிகழ்ச்சியில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.