சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் அதிகரிக்கும் நோய்கள்

சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை முதல் எதிர்வரும் 17 வரை நடைபெறும் தேசிய விஷத் தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

‘தோல் வெண்மையாக்கும் கிறீம்களைப் பயன்படுத்துவதன் ஆபத்து என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விஷத் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் இடையில் முகத்தை வெண்மையாக்கும் கிறீம்களில் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதாகும்.

பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் கலந்த கிறீம்கள் உடல் முழுவதும் பயன்டுத்தப்படுகின்றன. இது ஆபத்தானது. பாதரச நச்சால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.