
சரஸ்வதி பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வு
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி சரஸ்வதி பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வும் கெளரவிப்பு விழா நேற்று ஞாயிற்று கிழமை மாலை சரஸ்வதி வித்தியாலய ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை அதிபர் திருமதி ச.பிரகலாதேவி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்கல்குடா வலய உதவி கல்லி பணிப்பாளர் கே. ஜீவகரன், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய அதிபர் ந.சுரேந்திரகுமார் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், மகளீர், மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பாலகர்களின் நிகழ்ச்சிகளாக வரவேற்பு நடனம், நாடகம், பேச்சுக்கள் பாடலுக்கு அபிநயம், குழு நடன நிகழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று தொடர்ந்து மாணவர்களுக்கு பரிசுகளும் நினைவு சின்னமும் வழங்கப்பட்டது .
மேலும் குறித்த நிகழ்வுகளுக்கு பாலகர்கள் சிறப்பாக தமது பாத்திரத்தை ஏற்று செய்திருந்தனர் சிறப்பாக அவர்களை தயார் படுத்தியிருந்தமை ஆசிரியைகளின் அயராத முயற்சியை பிரதிபலிக்கிறது.


