அமெரிக்காவுடனான போரில் ஈரான் ஒருபோதும் சரணடையாது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். அதேவேளை, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியாக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய பெசெஷ்கியான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முந்தைய நாள் எச்சரிக்கைகளை விமர்சித்து, அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது எனக் கூறினார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்றும், அமைதியான அணுசக்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கான தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஈரான்–அமெரிக்க தரப்புகளுக்கு இடையே பல மாதங்களுக்குப் பின்னர் நியூயோர்க்கில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகள் மூலம் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பெசெஷ்கியான் உரையாற்றத் தொடங்கியபோது அமெரிக்க பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளியேறியதாகவும் Reuters தெரிவித்துள்ளது.











